இந்தியாவின் கேரளாவில் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவரின் மகள் விஷ்ணு பிரியா(வயது 23).
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார், இவரது உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் விஷ்ணு பிரியாவை தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்றுள்ளனர்.
இறுதிச்சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது விஷ்ணு பிரியா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணு பிரியாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்த போலிசார், விசாரணையை தொடங்கினர்.
விஷ்ணு பிரியாவின் செல்போனை ஆய்வு செய்ததி்ல், ஷியாம்ஜித் என்பவர் கடைசியான போன் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஷியாம்ஜித்தை தொடர்பு கொண்ட போது, விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை விட்டு விஷ்ணு பிரியா விலகி சென்றுவிடுவார் என்ற பயத்திலும், வேறு யாரையாவது காதலிக்கலாம் என்ற பொறாமையிலும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஷியாம்ஜித்தை கைது செய்த போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.