ஸ்டார்லிங் இணைய சேவையை பெற இலங்கையில் இவ்வளவு தொகை செலுத்த வேண்டுமா..!!

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய  சேவைகள் ஆரம்பித்த பின்பு குறித்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கை மக்கள் சுமார் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், மாதகட்டணமாக 99 டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு, இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது….

Read More

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தந்தை..!! கடும் கோபத்தில் மக்கள்..!

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளி நடத்தி வந்தனர்.இந் நிலையில் இன்று புதன்கிழமை (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 45 வயதுடைய பிபிலே சமிந்த என்ற குகுல் சமிந்த என்பவரும் 37 மற்றும் 46 வயதுடைய…

Read More

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்..!! லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 3790 ரூபாய். 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 குறைக்கப்பட்டு ரூ.1,525 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.  

Read More

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்புக்கள்..!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று (03) விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் (04) நாளையும் (05) சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் (04) நாளையும்…

Read More

பரீட்சைப் பெறுபேற்றினை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவர் ஒருவர் தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் குருநாகல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.2023 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் ஒருவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். குறித்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

Read More

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஜனாதிபதி எடுத்த உடனடி நடவடிக்கை..!!

நாட்டில் மழையுடனான சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதாவது இயற்கை அனர்த்தங்களினால் முற்றாக அழிந்த வீடுகளை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி மீளக் கட்டித் தருமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைகளுக்கு முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

Read More

இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! இந்த நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை..!

புதிய விசா ஊக்குவிப்புகளுக்காக இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி எதிர்வரும் நாட்களில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குள் பிரவேசிப்பதற்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் 60 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன….

Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழி விண்ணப்பம் ஜூன் 14 ஆம் திக‌தி மதியம் 12 மணிக்குப் பிறகு நிறுத்தப்படும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் திக‌தி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது.அரச பாடசாலைகள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட…

Read More

சகோதரனுடன் சேர்ந்து கணவனை விசம் வைத்து கொன்ற மனைவி..!! திடுக்கிடவைக்கும் சம்பவம்..!

மனைவி ஒருவர் தனது கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது அம்பாந்தோட்டை – பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.கடந்த 20ஆம் திகதி குறித்த கொலைச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது…

Read More

இலங்கை சிறுவர்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுகள்..!!

இலங்கை சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்த தீரமானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதத்தில் வரும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி குறித்த கணக்கெடுப்பானது நடத்தப்படவுள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 6 முதல் 18 வயது வரையிலான சிறுவர்ளின் ஊட்டச்சத்து அளவு தனித்தனியாக அளவிடப்படவுள்ளது.குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட…

Read More