எரிவாயு விலைமாற்றத்தால் சில உணவுவகைகளின் விலையில் மாற்றம்..!!

இலங்கை உணவகங்களில் அதிகளவில் நுகர்ப்படும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைடு ரைஸ் ஆகியவற்றின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை குறைப்புக்கு அமைவாகவே இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோல்ஸ் உள்ளிட்ட சோர்ட் ஈட்ஸ் வகைகளின் விலைகள் 10 ருபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லிற்ரோ மற்றும் லாப் எரிவாயு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.