அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி..! மாத்தறையில் திடுக்கிடும் சம்பவம்..

மாத்தறையில் உள்ள அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தன்னுடைய‌ சகோதரனை தடியால் அடித்து கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மனம்பேரிகே கருணாதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சகோதரன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான சகோதரன் ஆகிய இருவரின் வீடுகளும் ஒரே காணியில் அமைந்துள்ளதுடன் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

இறந்தவரின் மனைவி பொலிஸாரிடம் அவர் மாதம் ஒருமுறை கிராமத்து வீட்டுக்கு வந்து இலவங்கப்பட்டை அரைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தெஹியத்தகண்டிக்கு சென்றதகவும்,கடந்த 28ஆம் திகதி வீட்டுக்கு வருவதாகக் கூறியும் அவர் வரவில்லை என கொடுத்த முறைப்பாட்டின் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்,மேலதிக விசாரணையின் போது சந்தேக நபர் 28ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது சகோதரனை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் அவரது உடலுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.மேலும் விசாரணையில் சந்தேக நபரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அவருடன் பகையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *