வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாககூறி பணமோசடி செய்த பெண் கைது…!

பணங்களை பெற்று வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த பெண்னை இன்று (2023.12.09) நீர்கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விசாரனையில்,தென்கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கந்தானை நாகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாமிரபரணி பட நடிகை பானுவா இது..? வெளியான புகைப்படங்கள் அதிர்ந்து போன ரசிகர்கள்..

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் தான் நடிகை பானு.இவர் இதற்கு முன் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை ஆவார்.முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து இவர் தமிழில் சில படங்களில் நடித்தார், அந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கடைசியாக பானு, தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்தார்.நடிகை பானு […]

மருமகளை துஸ்பிரயோகம் செய்த மாமனார்..!

தனது மகன் திருமணம் செய்ய விரும்பிய 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஆனமடுவ பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கூலித் தொழில் செய்து வரும் தனது 18 வயது மகனுக்கு , 16 வயது நிரம்பிய சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக இரு குடும்பத்திரும் […]

நடிகர் மதுரை மோகன் காலமானார்…!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் `மீசை’ மோகன் இன்று காலமானார்.விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். […]

ஆசிரியர் ஒருவரால் தனது உயிரை மாய்க்க முயன்ற மாணவி..!

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா தரணிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இந்நிலையில் குறித்த மாணவி தனது உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி அண்மையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த மாணவி உயிரை மாய்க்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து குறித்த ஆசிரியருக்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் அளிக்கப்பட்டது. இதேவேளை வலயக்கல்வி […]

இளைஞர் ஒருவரை காரில் ஏற்றி தாம் பொலிஸ் என கூறி சுட்டுதள்ளிய மர்ப நபர்கள்..!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் காலி, ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. காரில் வந்த சிலர், பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அந்த இளைஞர் காலில் துப்பாக்கியால் சுட்டு வழியிலேயே விடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்டேட்டை அதிகரித்து தள்ளும் மெட்டா நிறுவனம்..!

மீண்டு ஒரு புதிய அப்டேட்டை வழங்குவதற்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை தயார்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், குரல் பதிவு(voice record) செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை ஒருமுறை மட்டுமே கேட்கும்(One time view) வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளை ஒரு முறை மட்டுமே பார்க்க கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தது.இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், குறித்த வசதியை இன்னும் […]

ரொம்ப கெட்டு போய்ட்ட நீ..? லாஸ்லியாவை பேசிய ரசிகர்கள்..!

லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஜிம் உடையில் பின்பக்கத்தை காட்டி காட்டி இளைஞர்களின் சூட்டைத் தூண்டியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை அனைத்து இளைஞர்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து சில இளைஞர்கள் ஜொள்ளு விடுவதாக தகவல் வெளியாகியுள்ளன. முழுமையான அழகுக்காக மொத்த சொத்தையும் விற்கலாமா? என கேட்கும் அளவிற்கு தேவையான லைக்குகளை கேட்காமலே பதிவு செய்து வருகின்றனர்.விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் இந்த […]

வேலைவாய்ப்பு‍‍- Supervisor ,Cooking / Cleaning, Sales Boy, Sales Girl

1.வேலைவாய்ப்பு‍‍ MEGUMI FOOD HOUSE இல் 2.இடம்- யாழ்ப்பாணம் 3.வேலை- ~Cooking / Cleaning ~Sales Boy( Full / Part Time) ~Sales Girl ( Full / Part Time) ~ Supervisor 4.Interested persons send your CVs. Salary will discuss in interviews. 5.Address-120, Singagiri building, Palaly road, Thirunelvely, Jaffna தொடர்புகளுக்கு-0774005578 megumifoodhouse@gmail