அப்டேட்டை அதிகரித்து தள்ளும் மெட்டா நிறுவனம்..!

மீண்டு ஒரு புதிய அப்டேட்டை வழங்குவதற்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை தயார்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், குரல் பதிவு(voice record) செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை ஒருமுறை மட்டுமே கேட்கும்(One time view) வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021 இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளை ஒரு முறை மட்டுமே பார்க்க கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தது.இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், குறித்த வசதியை இன்னும் சில நாட்களில் புதிய அப்டேட் மூலம் அனைவரும் பயன்படுத்தலாம் என மெட்டா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *