இளைஞர் ஒருவரை காரில் ஏற்றி தாம் பொலிஸ் என கூறி சுட்டுதள்ளிய மர்ப நபர்கள்..!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் காலி, ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

காரில் வந்த சிலர், பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அந்த இளைஞர் காலில் துப்பாக்கியால் சுட்டு வழியிலேயே விடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.