120 அடி உயரம் கொண்ட தேர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!!நூல் இழையில் உயிர் தப்பிய மக்கள்..!

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள மதுராம்மா கோயிலில் உள்ள 120 அடி உயரமுள்ள ராட்சத தேர் சரிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.மதுராம்மா ஆலயத்தில் நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.இதன் போதே இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் தப்பி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *