வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்கள்..!

வெல்லவாய பொலிஸார் 15 வயது சிறுமி ஒருவரின் மூத்த சகோதரனை குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் மொனராகலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.வயிற்று வலி காரணமாக குறித்த சிறுமி தனது தாயுடன் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில் 2019 முதல் 2024 வரை அவரது மூத்த சகோதரரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் போது, ​​நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், ​​அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதோடு தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *