எல்லைகளை மீறும் இளம் சமுதாயம்..!! பாடசாலை ஆசிரியர்கள் மீது தாக்குதல்..!

இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் மீது கல்னேவ பகுதியை சேர்ந்த‌ பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (6/03/2024) கல்னேவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் முர‌ண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, முர‌ண்பாட்டில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் தாக்கியதில், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

இந்நிலையில் காயமடைந்த மாணவனை பார்வையிடுவதற்காக விளையாட்டு ஆசிரியர் மாணவனின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் வீட்டிலிருந்த குழுவொன்று விளையாட்டு ஆசிரியரை பலமாக தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியை பற்றி விசாரிக்க பாடசாலையின் மற்றொரு ஆசிரியர் மாணவனின் வீட்டிற்குச் சென்றபோது, ​​அந்தக் குழு அந்த ஆசிரியரையும் தாக்கியுள்ளனர்.இதனையடுத்து சந்தேக நபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய ஏனையவர்கள் தொடர்பில் கல்னேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *