சொந்த புகைப்படங்கள் உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ள முடியும்..!!தபால் திணைக்களம் புதிய அறிவிப்பு..!

தபால் திணைக்கள அதிபர் ருவன் சத்குமார தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு 2000 ரூபாய் செலவில் தங்களுடைய சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளுடன் கூடிய முத்திரைகளை வடிவமைக்கும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) முத்திரையை வெளியிடுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திருமணங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப 20 முத்திரைகள் கொண்ட முத்திரைத் தாளையோ அல்லது தமது சொந்த புகைப்படங்களையோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தார்.

தம்பதிகளின் புகைப்படங்களுடன் கூடிய இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடும்பங்கள் தங்கள் திருமண அட்டைகளில் தனித்துவமான ஒன்றைச் சேர்க்கலாம். “இந்த முத்திரைகள் தபால்தலைகளாகவும் பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *