நெல்லிக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க ஒரே ஒரு நெல்லிக்காய் போதும் என்றும், நல்ல மருந்து என்றும், சுவையான உணவு என்றும் கூறப்படுகிறது.நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும் .அதோடு உடல் எடையை சீக்கிரமாக குறைக்க விரும்புவார்கள் நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது