பசியில் பொலிஸாரின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி..!! வைரல் வீடியோ..!

உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் கதவை உடைத்து சிற்றுண்டி சாப்பிட முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.குறித்த சம்பவமானது அமெரிக்கா புளோரிடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த காணொளியில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது.

மேலும் தனது பாதங்களால் காரின் கதவைத் திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. இருப்பினும், கரசியின் முயற்சி வெற்றிபெறவில்லை. கார் கதவு பூட்டப்பட்டதால் கரடியால் திறக்க முடியவில்லை.இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.