சிறுநீரை கலந்து விற்பனை செய்த ஐஸ்கிரீம் வியாபாரி..!!

ஐஸ்கிரீம் வியாபரி ஒருவர் ஃபலூடா ஐஸ்கிரீமில் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை கலந்து விற்பனை செய்துள்ளார்.குறித்த சம்பவமானது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த வீடியோவில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன.

இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை, அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே அதிகாரிகள் விரைந்து சென்று சோதனையை மேற்கொண்டுள்ளனர்.குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.இது தொடர்பாக தெருவோர வியாபாரிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *