பெண்ணை எரிக்க முயற்சித்த நபரை கண்டறிய பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை..!!

குறித்த சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சந்தேக நபரை கைது செய்யவே பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார்.இந்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் (0717 478 912, 0718 594 423, 0112 323 356) பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.