வவுனியாவில் பரபரப்பு சம்பவம்..!! பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுழைந்த மர்ப நபர்..!

வவுனியா பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் நுழைந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2024) இரவு நடைபெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் இரவு வேளையில் அடையாளம் தெரியாத‌ நபரொருவர் உள்ளாடையுடன் உள்நுளைந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த‌ மாணவி ஒருவர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து குறித்த‌ நபர் தப்பி ஓடியுள்ளார்இதனையடுத்து இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச் சம்பவத்தில் மனமுடைந்து நோயினால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தினால் மாணவிகள் விடுதியை விட்டு முற்றாக வெளியேறி இந்த அநீதிக்கு எதிராக நீதி கோரி பல்கலைக்கழக விடுதியில் பாதுகாவலர்கள் எதற்கு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *