ஆசிரியரை விரட்டியடித்த மாணவர்கள்..!! காரணம் என்ன..? வைரல் வீடியோ..!

தற்போது தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.இது இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது.குறித்த ஆசிரியர் பாடசாலை வரும் போது தினமும் மது அருந்திவிட்டு வருவதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் படுத்து உறங்குவதாகவும், கேள்வி கேட்ட மாணவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போலவே தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கியுள்ளனர்.இதனையடுத்து அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார், அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.இதனால் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.