பலாப்பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா..!!

பலாப்பழம் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும்.இதனை அனைவரும் சுவைக்காக மட்டும் உட்கொண்டு வருகின்றார்கள் ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் ஆம் அந்த அளவிற்கு பலாப்பழத்தில் அதிக மருத்துவ குணம் காணப்படுகிறது.அந்த வகையில், பலாப்பழத்தின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

பலாப்பழத்தில் Glycaemic Index என்பது குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நன்மையே பயக்கும். இது வயிறு நிரம்பியதாக உணர வைக்கும்.பலாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஃபைபர் அதிகம் உள்ளது.

இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.பலாப்பழத்தில் குறைவான கலோரியே உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமிண் பி1, பி3, பி6 உள்ளது.பலாப்பழத்தில் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *