இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்..! இறந்து அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீட்டிற்கு வருகை…

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நபர் ஒரு வாரத்தின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இரண்டு மாதங்களுக்கு முன் கம்பளை பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந் நிலையில், சடலத்தை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.இதற்கு இடைப்பட்டகாலத்தில் இறந்தவரின் உறவினர்களை பொலிஸார் அடயாளம் கண்டுள்ளனர்.உயிரிழந்தவரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட தாயும் சகோதரரும் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சடலத்தை விடுவித்ததுடன், குழுவினர் சடலத்தை மேரிவிலவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு 2 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்தனர்.

இச் சம்பவம் நடந்து மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டிற்கு வந்த்துள்ளார். பயந்து போன உறவினர்கள். வந்தவரிடம் “நீங்கள் கம்பளையில் இறந்துவிட்டீர்கள் என மக்கள் வருத்தப்பட்டனர்.நாங்கள் உங்களை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம்” என தாயார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவர் இல்லை நான் அம்மா நான் கம்பளைக்கு போகவில்லை. “நான் நாவலப்பிட்டியில் இருந்தேன்..” என கூறியுள்ளார்.அதனால் தாயும், சகோதரனும், உறவினர்களும் இறந்து விட்டதாக நினைத்து புதைத்தவர் தொடர்பில் ஆராய்வதற்காக மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.அதற்கமைய, மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் பேரில் புதைக்கப்பட்ட நபர் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்ததன் படி இறந்ததாக கருதப்படும் நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் திருமணமான தனது மகள்களின் வீடுகளில் தங்கி அந்த வீடுகளுக்கு வெளியில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் சமீபகாலமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர்,சில காலமாக தனது வீட்டிற்கு வரவில்லை என இறந்தவரின் மகள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *