கங்குவா படபிடிப்பின் போது சூர்யாவிற்கு நடந்தது என்ன..?சூர்யாவின் தற்போதய நிலை..

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டு ரசிகர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு முன்பு ஆதவன் படத்தில் நடிக்கும் போது சூர்யாவுக்கு தோளில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர் காட்சியில் நடித்தபோது அவர் காயம் அடைந்த நிலையில் தற்போது 14 வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு மீண்டும் கங்குவா படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு கிளம்பி இருக்கிறார். அவரும் ஜோதிகாவும் ஏர்போர்ட் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. சூர்யாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள்.தமது அனுதாபங்களை தெரிவிது வருகின்றனர்.