நேஷனல் க்ரஷ்க்கு நடந்த சோகம்..! தீர்த்து வைத்த தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்..

  1. தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா. ஆம், இவர் நடிப்பில் அனிமல் படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை சந்தீப் வங்கா இயக்க, ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். எதிர் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட் படம் என கூறப்படுகிறது.

படம் ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ள நிலையில் படக்குழு படு வேகமாக படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடக்க, அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் படக்குழு அனைவரையும் பற்றி பேசிமுடித்த நிலையில். நடிகை ராஷ்மிகாவை பற்றி பேச மறந்து விட்டார்.இது ராஷ்மிகாவை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என நினைத்து ராஷ்மிகாவிடம் மன்னிப்பு கேட்டு. உங்கள் வளர்ச்சி என்னை ஆச்சர்ய படுத்துகிறது என பாராட்டினார்.