40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!! தேசிய அடயாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு..!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய‌ அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, 40 வயதுக்கு மேற்பட்டோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஜூன் 30-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அதனை நீடித்துள்ளதாக, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.