யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் குழப்பம்..!பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு..

யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இம்முறை யாழ். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எவரும். பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தேர்வு விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் பொறியியலில் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ். பல்கலைக்கழகத்தினை விருப்பத் தேர்வாக கொள்ளாத காரணத்தால் எவரும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1990களில் அனுமதி பெறப்பட்டு 2010களில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் யாழ். மாணவர்கள் பயன் பெறவேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் வடக்கில் உள்ள பெற்றோர் பிள்ளைகளை சொந்த மண்ணிலேயே கல்வி கற்பிக்க விரும்பாதது தொடர்பில் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.