தாய்மார்கள் வெளிநாடு செல்லதடை..பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு..!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை நாட்டிற்குள் விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியுள்ளார்.

முன்பு குழந்தைகளுக்கான வயது வரம்பு இரண்டு ஆண்டுகழிந்த பிறகு வெளிநாடு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது, தற்போது அது ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நிலையான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் செல்வதற்காக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர் சிறுமிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது அவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதை தடுக்க வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.