பெண் கிராமா உத்தியோகத்தர் மீது பாலியல் துஷ்பிரயோகம்..!!

கிராம உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் – கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராமஉத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோக செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஆவார்.இந்த சம்பவத்தில் 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 20 அன்று, சந்தேக நபர் பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து கைதான சந்தேக நபர் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்