கஞ்சியில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

கண்டியில் இலைக்கஞ்சியில் மயக்க மருந்தை கலந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நகைகளை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கஞ்சியை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகவும், எழுந்து பார்த்தபோது தங்களிடம் இருந்த நகைகள் காணாமல் போனதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்க்கச் சென்ற பெண், நோயாளிகளைப் பார்க்கும் நேரம் வரும் வரை அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணிடம் பேசி நட்பாகி கொண்டு வந்த கஞ்சியை குடிக்க கொடுத்துள்ளார்.அதை குடித்துவிட்டு மயங்கி விழுந்த பெண், சுயநினைவுக்கு வந்தபோது தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதை பார்த்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.