விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் மர்மமான முறையில் மரணம்..!!

19 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் கடுவலை பொலிஸாரால் 6 ஆம் திகதி அன்று ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி, இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் இளைஞரின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலையில் இளைஞர் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.எனினும் இளைஞரது மரணம் தொடர்பான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.