தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த பெண் மரணம்..! கொலையா..? இயற்கை மரணமா..?

நேற்றய தினம் (17/03/2024) மாலை அயல் வீட்டில் குடும்பப் பெண்ணொருவர் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு சுழிபுரம் சிவபூமியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில் குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கணவர் அவரை பலமுறை தாக்கியதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.எனினும், தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *