மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகள் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெலிமடை பிரதேசத்தில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்தில் ஈடுபட்டுகொண்டிருந்த பாடசாலை மாணவர்களை பொலிஸார் கையும்களவுமாக பிடித்துள்ளனர்.குறித்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மதுபான விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.

பாடசாலை மாணவர்கள் குறித்த நேரத்தில் அதிக விலையில் விற்கும் மதுபானத்தை அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.கட்டிடத்தின் பூட்டை உடைத்து மாணவர்கள் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.