தம்பியால் அண்ணாவிற்கு நேர்ந்த கொடுமை..!! இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்..!

தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளையசகோதரன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது (30-03-2024) அன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல – குடாகம பகுதியில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.42 வயதுடைய குடாகம, அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ​​அவரது தம்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் கூரிய ஆயுதத்தால் தனது மூத்த சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.