நயன்தாராவின் சில்மிஷம்..!சிக்கலில் மாட்டிய தயாரிப்பாளர்..

நடிகை கோபிகாவிற்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி தயாரிப்பாளரை நயன்தாரா சிக்கலில் மாட்டவிட்ட சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் டாப் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.அண்மையில் இவர் அன்னாபூரணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்து கொண்டிருக்கிறது.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலித்து வந்தனர். இதையடுத்து, ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலராக‌ சுற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.இப்படி இருக்க இது நம்ப ஆளு படத்தின் போது சிம்பு தயாரிப்பாளர் தேனப்பனின் மொபைல் கேட்டுள்ளார்.

அப்போது, யாருக்கும் தெரியாமல் தயாரிப்பாளரிடம் கோபிகாவுக்கு ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த மெசேஜைப் பார்த்த டென்ஷனான கோபிகா, தயாரிப்பாளருக்கு போன் செய்து என்ன சார் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் நான் இதை அனுப்பவில்லை நேற்று நயன்தாரா தான் என் போனை வைத்திருந்தார் அவர் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் மன்னித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.இதை அடுத்து நயன்தாராவிடம் கேட்டபோது அவர் விழுந்துவிழுந்து சிரித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.