கிறிஸ்துமஸ் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரிற்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி..!

உடப்பு பிரதேசத்தில் குடும்பத்துடன் நத்தார் தேவ‌ ஆராதணைகளில் கலந்து கொள்வதற்காக சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம் நத்தார் தினமன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இறால் பண்ணை மற்றும் தென்னந்தோப்புகளை வைத்துள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டில் ஜன்னல் ஒன்றை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.