பொலிஸார் சோதனையால் மடக்கி பிடிக்கப்பட்ட பெண்..!

அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றி கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்குள் புகுந்த பொலிஸார், வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.அப்போது வீட்டில் இருந்த அலுமாரி ஒன்றில் 30 கசிப்புபோத்தல் இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டினுள் இருந்த பெண்ணை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.