விடுமுறையை மாமா வீட்டில் கொண்டாட சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்..!

நமுனுகுல பிரதேசத்தில் பொத்கல ஓயாவில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞன் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த ஜெயக்குமார் திலக்ஷன் என்ற 17 வயதுடையவராவார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக நமுனுகுல‌ பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு வந்த அவர் தனது நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.