முகநூல் பதிவுமூலம் தனது மரணத்தை முன்கூட்டியே தெரிவித்து..உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!!

அனுராதபுரத்தில் இறப்பை முன்கூட்டியே அறிவித்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த நபர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்த போது வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.பின்னர் இது தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர். சடலம் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.