வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பு இன்று எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..!!மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வெளியில் பல மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.இது குறித்து நடை பெறும் மோசடி தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய‌ செயற்பட்ட‌ தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, ​​மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களை தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 உடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *