பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு கிடைத்துள்ள ஒரு அறிய வாய்ப்பு..!!

எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் வருகின்ற ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை காண்பிக்கும் வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதனை சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 11ஆம் திகதி ரமழான் பண்டிகைக்காக சிறையில் உள்ள இஸ்லாமிய மதக் கைதிகளை மட்டும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தற்போதைய விதிமுறைகள், முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக, கைதிகளின் உறவினர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.