இலங்கையில் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.இந்த நோக்கத்திற்காக, முக அடையாளம் மற்றும் கைரேகை தரவு சேகரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.இந்த திட்டம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்,குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளின் ஒரு நாள் சேவைக்காக பொதுமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *