இலங்கையில் பல நாட்கள் கழித்து ஒரு உயிரை எடுத்த கொரோனா(கோவிட்)..!

நாடு கொரோனா(கோவிட்) தொற்றில் இருந்து தப்பி ஒருவருடம் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் நாட்டில் ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.65 வயதுடைய கம்பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.