முல்லைதீவில் கரை ஒதுங்கிய வேறு நாட்டவரின் சடலம்..!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று (19) காலை கரை ஒதுங்கிய சடலம் பங்களாதேஷ் பிரஜையின் சடலம் என கண்டறியப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

 

இதன்போது சடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் குறித்த சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறும், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.