மனைவியை தாக்கிய கணவர்..!மனைவி மரணம்..10 மாதங்களின் பின் கிடைத்த நீதி..!

களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்திவிட்டு அதனை , விபத்து என கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் 10 மாதங்களுக்கு பின்னர் கைதாகியுள்ளார்.32 வயதுடைய பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவதில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தாயான 30 வயதான அவரது மனைவி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

 

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது மரணம் தொடர்பில் சந்தேகிப்பதாக உயிரிழந்தவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாடுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கணவரை கைது செய்துள்ளனர்.