நான் இந்த உறவிலிருந்து வெளியேறுகிறேன்…! நடிகை ஷிலா அறிவிப்பு..

நடிகை ஷீலா ராஜ் குமார் தனது கணவரை பிரியப்போவதாக தனது சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.திரெளபதி,மண்டேலா,ஜிகிர்தாண்டா போன்ற படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடிகையாக மட்டும் இல்லாமல்,பரத நாட்டிய கலைஞராகவும் உள்ளார்.2016 திரைக்கு வந்த ஆறாது சினம் படம் மூலமாக‌ நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து அசுரவதம், நம்மவீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்,மேலும் மலையாளத்திலும் சில படங்களை நடித்துள்ளார்.மேலும் சீ தமிழில் வெளியான அழகிய தமிழ்மகள் சீரியலிலும் நடித்துள்ளார்,சொல்லப் போனால் இந்த சீரியல் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது எனலாம்.

இப்படி சினிமா துரையில் பிஸியாக நடித்துவரும் ஷீலாவை சிங்கிள் என மக்கள் நினைத்து வருகின்றனர்.ஆனால் சில வருடங்களுக்கு முன்னே இவருக்கு திருமணம் நடந்தது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. நடிகை ஷீலா ரஜ்குமாரிற்கு 2014ஆம் வருடமே திருமணம் ஆகிவிட்டது,அதுவும் கடலுக்கு நடுவிலே மாலை மாற்றி படு வித்தியாசமாக திருமணம் செய்து கொண்டார்.திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றும் தம்பி சோழன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.மேலும் தம்பி சோழன் உடைய குறும்படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறியே திருமணம் செய்து கொண்டனர்.இவ்வாறு பல போராட்டங்களை தாண்டி திருமணம் செய்த ஷீலா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்” என்று தனது கணவரையும் டக் (tag) செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.