இலங்கையில் பணங்களை கையாளுவோர்க்கு முக்கிய ஆலோசனை..!!

இலங்கை நாணயத்தாள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை இலங்கையில் பணத்தாள்களை கையாளும் போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.அதிகரித்து வரும் போலி ரூபாய் நோட்டுகளின் பரவல் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் மேலும் கூறுகையில்,குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஏனைய பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை பணத்தை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம்.பண பரிவர்த்தனையின் போது ரூபாய் நோட்டுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.