மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய‌ அறிவுறுத்தல்கள்..!! உத்தியோகத்தர்களின் மோசடி..!

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை பயன்படுத்துவோர் பணம் செலுத்தும் போதும் பற்றுச்சீட்டு பெறும்போதும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சில இடங்களில் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கும் மக்களிடம் இருந்து தபால் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணம் வசூலிப்பதும் அந்த பணத்தை மின்சார சபைக்கு செலுத்தாமல் கையாடல் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே தபாலகங்கள், உப தபாலகங்கள் மற்றும் உள்ளூர் முகவர்களிடம் பணம் செலுத்தும் பொதுமக்கள் பற்றுச்சீட்டிணை உரிய வகையில் பரிசீலிக்கும் படியும் அல்லது இணைய வழி ஊடாக மின்சார சபை கிளை ஊடாகவோ கொடுப்பனவு கிடைக்க பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.