மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத விடுதி..!!அதிரடியாக களம் இறங்கிய பொலிஸார்..!

பொலிஸாரினால் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.குறித்த சுற்றிவளைப்பின் போது விடுதியின் முகாமையாளர் 6 பேர் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் அதிரடியாக‌ கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹரகம நகரத்தை கேந்திரமாக கொண்டு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாரிய அளவிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் விடுதிகள் உருவாகியுள்ளன.

நகர மையத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த விடுதிக்கு வருவதாக தெரியவந்துள்ளது.எவ்வித வரம்புகளுமின்றி இந்த விடுதிகள் நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.