வட்ஸ்அப் மூலம் கிடைத்த செய்தி..!! திடீரென நாட்டைவிட்டு வெளியேறிய பெண் வைத்தியர்..!!

பெண் வைத்தியர் ஒருவர் திடீரென எவ்வித தகவலும் வழங்காது வெளிநாடு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட மயக்க மருந்து நிபுணராக பணிபுரியும் வைத்தியர் ஆவார்.தான் சென்றது குறித்து மருத்துவமனை பணிப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாக‌ தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையின் பணிப்பாளர் இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.எனினும் குறித்த பெண் மருத்துவர் எதற்காக நாட்டைவிட்டு வெளியேறினார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.