கனடாசெல்லும் இலங்கையர்களுக்கு கனேடிய அரசாங்கம் கூறியுள்ள முக்கிய தகவல்..!!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.குறித்த தகவலை கடனா குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது தமது கொள்கை எனவும் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி கூறியுள்ளார்.