வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்..!

ஆண் குழந்தை ஒன்று 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் சீனவில் பிறந்துள்ளது.குறித்த சம்பவம் மருத்துவர்களையும் மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இவ்வாறு வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் இவ்வாறு வாலுடன் பிறந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும் போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.இது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *