மட்டகளப்பு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்..!

இன்று (28)வியாழக்கிழமை அன்று விசித்திரமான முறையில் காட்சியளிக்கும் பொருள் ஒன்று மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.புதன்கிழமை மாலை அப்பகுதி கடலில் மர்ம பொருள் மிதப்பதை அங்கிருந்த மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை குறித்த பொருள் கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு கரையொதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடற்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.