ஆண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த மர்ம நபர்..!! பொது மக்களால் மடக்கி பிடிப்பு..!

தொலைபேசியில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றுபவர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது.இதனையடுத்து குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.